ஈரசோனியச் சேர்மம் அல்லது ஈரசோனிய உப்பு (Diazonium Compound or Diazonium Salt) என்பது R-N2+X− என்னும் பொதுத் தொழிற்பாட்டுக் கூட்டத்தைக் கொண்ட கரிம வேதியியற் சேர்மம் ஆகும். இங்கு R என்பது அற்கைல் அல்லது ஏரைல் கூட்டத்தையும் X− என்பது ஏலைடு போன்ற கனிம வேதியியல் எதிர்மின்னயனியை அல்லது கரிம வேதியியல் எதிர்மின்னயனியைக் குறிக்கும். அசோச் சாயங்களின் கரிம வேதியியல் தொகுப்பில் ஈரசோனிய உப்புகள் (சிறப்பாக, ஏரைல் கூட்டத்தைக் கொண்டவை) பயன்படுத்தப்படுகின்றன. மேலும்...
சூரிய வெப்பத்தைத் தக்கவைத்துக் கொள்ள வளிமண்டலம் இல்லாதமையால் புதனில் கோள்பரப்பு மற்றெந்தக் கோள்களையும் விடவும் பெரும் வெப்பநிலை மாற்றங்களைக் காண்கின்றது.
நீச்சல்காரன், மதுரையைச் சேர்ந்த இயற்பியல் பட்டதாரி. 2010 முதல் விக்கிப்பீடியாவில் தமிழ், ஆங்கிலம், இந்தி முதலிய மொழிகளில் பங்களித்துவருகிறார். இதுவரை தமிழில் 174 புதிய கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். வார்ப்புருக்களின் ஆக்கத்திலும், மொழிபெயர்ப்பிலும் அவ்வப்போது பங்களித்துள்ளார். தமிழ்க் கணிமையில் ஆர்வமுடைய இவர் சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி முதலிய கருவிகளை உருவாக்கி உள்ளார். விக்கித் திட்டங்களுக்கான பல்வேறு கருவிகள் மற்றும் ஜாவாஸ்கிரிப்ட் நிரல்கள் உருவாக்கியுள்ளார். சில துப்புரவுப் பணிகள் செய்யவும், புள்ளிவிபரங்கள் சேகரிக்கவும் இவரின் தானியங்கி பயன்படுகிறது.
அப்பல்லோ 17 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பதினோராவது மற்றும் கடைசிப் பயணமாகும். திசம்பர் 7, 1972 அன்று ஏவப்பட்ட இப்பயணத்தில் யூகன் செர்னான், ரொனால்டு எவான்சு மற்றும் காரிசன் சுமிட் ஆகிய விண்வெளி வீரர்கள் பங்கேற்றனர். இறுதியாக மாந்தரை நிலவிற்கு கொண்டு சென்ற திட்டம் இதுவே. படத்தில் அப்பல்லோ 17 இன் போது நிலவில் எடுக்கப்பட்ட அகலப்பரப்பு காட்சி உள்ளது.