1984
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19வது நூ - 20வது நூ - 21வது நூ |
| பத்தாண்டுகள்: | 1950கள் 1960கள் 1970கள் - 1980கள் - 1990கள் 2000கள் 2010கள் |
| ஆண்டுகள்: | 1981 1982 1983 - 1984 - 1985 1986 1987 |
1984 (MCMLXXXIV) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும்.
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 1 - புரூணை விடுதலை பெற்றது.
- ஜனவரி 24 - ஆப்பிள் மக்கின்டொஷ் விற்பனை ஆரம்பம்
- ஆகஸ்ட் 11 - அமெரிக்காவின் 40 ஆவது அதிபர் ரானல்ட் ரேகன் வானொலியில் வாராந்திர ஒலிபரப்பிற்கான ஒத்திகையில் ரஷ்யாவின் மீது குண்டு வீசுவோம் என்று கூறியது வெளிவந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- செப்டம்பர் 1 - யாழ்ப்பாணம் திக்கத்தில் இடம்பெற்ற கண்ணிவெடித் தாக்குதலில் 20 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 31 - இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து வன்முறைகள் ஆரம்பம்.
- டிசம்பர் 4 - 1984 மன்னார் படுகொலைகள்: இலங்கையில் மன்னாரில் இராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் 107 முதல் 150 தமிழர் வரை கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 31 - ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
பிறப்புக்கள்[தொகு]
இறப்புக்கள்[தொகு]
- பெப்ரவரி 21 - மிகயில் ஷோலகவ்
- அக்டோபர் 31 - இந்திரா காந்தி
- டிசம்பர் 13 - ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம், இலங்கை மெதடிஸ்த மதகுரு
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - கார்லோ ரூபியா, சைமன் வான் டெர் மீர்
- வேதியியல் - ராபர்ட் மெரிஃபீல்டு
- மருத்துவம் - நீல்சு ஜெர்ன், ஜோர்ஜசு கோலர், சேசர் மில்ஸ்Dஐன்
- இலக்கியம் - யாரொசுலாவ் செய்ஃபெர்ட்
- அமைதி - பிஷப் டெஸ்மண்ட் டூட்டு